நாயக்கர் கால நடுகல் - கண்டுபிடிப்பு


Event Date : 26-06-2025  |   Event Venue : கல்வார்பட்டி  |  Department : HISTORY

நமது கல்லூரி முதுநிலை வரலாற்று ஆய்வுத் துறை தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பாக 26.06.2025 வியாழக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கமலை அருகே கல்வார்பட்டி என்ற ஊரில் இரண்டு தொகுதிகளாக இருந்த நாயக்க மன்னர் காலத்திய சிற்பங்கள் கண்டறியப்பட்டு அவை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இரண்டு நாயக்க அரசர்கள், ஒரு சிற்றரசர் தனது மனைவியுடன் உள்ள புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. இதன் காலம் சுமார் 1700-க்கும் 1850-க்கும் இடைப்பட்ட காலத்தியது என்று கண்டறியப்பட்டது.

இதில் வரலாற்று இணைப் பேராசிரியர் முனைவர் செ. சேவியர், கௌரவ விரிவுரையாளர் இரத்தினக்குமார், முதுநிலை மாணவர் வி.முகேஷ் கண்ணா, இளநிலை மாணவர்கள் கா.மோகன்குமார், ஆ.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.