Events
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
Event Date : 24-06-2025 | Event Venue : GAC College, Karur | Department : PLACEMENT CELL
நமது அரசு கலைக் கல்லூரி (த), கரூர்-5-ல் இன்று (24-06-2025 செவ்வாய்க்கிழமை) கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் திருமதி. P. ராஜலட்சுமி மற்றும் திரு. M. தர்மலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு,
1. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்.
2. பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு உரிய பாடக்குறிப்புகளை இலவசமாக மின்னனு முறையில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.
3. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சுமார் 1200 குறுகிய கால படிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில் முது அறிவியல் இயற்பியல், வேதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சி குழு ஒருங்கிணைப்பாளர், இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வை. கதிரவன் செய்திருந்தார்.