வெள்ளியணை நாட்டு நலப்பணித் திட்ட முகாம்


Event Date : 22-03-2025  |   Event Venue : Velliyanai  |  Department : NATIONAL SERVICE SCHEME

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)யின் சார்பில் வெள்ளியணை மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் நாட்டு நலப்பணித் திட்டச் (அலகு 2, 3 ,4) சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று 22.03.2025 காலை 9.00 மணியளவில் ஈஸ்வரன் கோயில் சுற்று வளாகம், அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் மற்றும் அரசு தொடக்கப் பள்ளி வளாகத் தூய்மைப் பணி நடைபெற்றது.

நண்பகல் 1.00 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. பிறகு சரியாக 2.30 மணிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறைத்தலைவர் முனைவர் கு.ஜாகிர் உசேன் அவர்கள் 'மனமும் நலமும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் அரசு கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா.ச.விஜயராஜன் மற்றும் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் க.சரவணன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் கு.பெரியசாமி(அலகுll), முனைவர் பி.மாறன் (அலகு-lll), முனைவர் வீ.முருகன் (அலகு-lV), மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நன்றியுரையுடன் இன்றைய நாள் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது..
24.03.2025 : திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் கரூர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)யின் சார்பில் வெள்ளியணை மாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் நாட்டு நலப்பணித் திட்டச் (அலகு 2, 3 ,4) சிறப்பு முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று 24.03.2025 காலை 9.00 மணியளவில் பஞ்சாயத்து அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் வளாகத் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. சோமசுந்தரம் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நண்பகல் 1.00 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வீ.முருகன் அவர்கள் 'நாட்டுநலப் பணித் திட்டத்தில் நான்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் கு.பெரியசாமி(அலகுll), முனைவர் பி.மாறன் (அலகு-lll), முனைவர் வீ.முருகன் (அலகு-lV), மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நன்றியுரையுடன் இன்றைய நாள் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது...