Events
சர்வதேச யோகா தினம் 2025
Event Date : 21-06-2025 | Event Venue : GAC College, Karur | Department : NATIONAL CADET CORPS
அரசு கலைக் கல்லூரி, கரூர்.
சர்வதேச யோகா தினம் 2025.
11வது சர்வதேச யோகா தினம் 21.6.25 அன்று காலை 7.00 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர். க. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கல்லூரி திறந்த வெளி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணாக்கர்கள் என 80 நபர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
முன்னதாக கல்லூரி விலங்கியல் துறை தலைவர் முனைவர். கார்த்திகேயன் அவர்கள்
உடலுறுப்புகளுக்கு யோகாவின் அவசியம் குறித்து எடுத்துரைத்து மாணாக்கர்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனனவர். விநாயகம் அவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சியை வழங்கி அதன் பலன்களை எடுத்துரைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி அவர்கள் யோகா தின பாரம்பரியத்தை எடுத்துரைத்தார்.